என் இதயத்தில் நீ வாழ்ந்தாலும்,உன்னை காண துடிக்கும் என் மனம்.
அவள் காத்திருப்பாள் பத்து மாதம் தன் உறவுக்காக,
நான் காத்திருப்பேன் ஆயுள் வரை என் உயிருக்காக.
ஈன்றெடுத்த புதல்வனை கைபற்றுவாள் தன் வாழ்நாள் வரை,
உன்னை கைபற்றவே நான் வாழ்வேன் என் வாழ்வு உள்ள வரை.
அவள் ஏக்கமும், வலியும், நேசமும் உலகிலேயே தூய்மையானது
உனக்காக ஏங்கும்,
உன் பிரிவின் வலியை உணரும்,
உன்னை அளவற்று நேசிக்கும்,
நானும் ஒரு தாய் ஆகிறேன்.
இறைவனே என் மழலையை எனக்கு தருவாயாக.!
No comments:
Post a Comment